சபரிமலையில் விஷூக்கனி தரிசனம்

சபரிமலையில் பிரசித்தி பெற்ற புத்தாண்டு விஷூக்கனி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விஷூக்கனி தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் பிரசித்தி பெற்ற புத்தாண்டு விஷூக்கனி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விஷூக்கனி தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் சித்திரை மாத பூஜைகள் மற்றும் புத்தாண்டு விஷூக்கனி தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  விஷூக்கனி தரிசனத்தையொட்டி ஏப்ரல் 10- ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி சன்னிதான நடை திறந்து தீபம் ஏற்றினார்.  புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகத்தை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு  தொடங்கி வைத்தார். பின்னர் வழக்கமான பூஜைகள் தொடஙகின. உதய அஸ்தமன பூஜை, படிபூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
ஏப்ரல் -14ஆம் தேதி இரவு ஐயப்பனுக்கு அத்தாழபூஜை நடத்தி ஐயப்பன் முன் காய்கனிகள், பணம், காசு உள்ளிட்டவை பாத்திரத்தில்  வைத்து நடை அடைக்கப்பட்து. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஷூக்கனிகாணும் நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு கைநீட்டம் பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. 
மாளிகைபுறம் மஞ்சமாதாகோவிலிலும் இந்த நிகழ்ச்சி நடந்தது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விஷூக்கனி தரிசனம் செய்தனர்.  
வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். காலை 9 மணிக்கு உதய அஸ்தமன பூஜை, பகலில்  களபாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெறும். 
கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அச்சன்கோவில், ஆரியங்காவு உள்ளிட்ட ஐயப்பன் கோயில்களிலும் விஷூ கனிகாணும் வைபவம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com