ராஜபாளையத்தில் ஸ்டுடியோ விடியோ கலைஞர்கள் சங்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சங்கத்தின் மூத்த நிர்வாகி ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சங்கத்தின் தலைவராக குமார், செயலாளராக முத்துக்குமரன், பொருளாளராக சொரிமுத்துகுமார் மற்றும் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனர். புதிய நிர்வாகிகளை மாநில, மாவட்ட மற்றும் முனனாள் நகர நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். நலிவடைந்த புகைப்பட கலைஞருக்கு சங்கத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.