விருதுநகர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 837 பேருக்கு  மானிய விலையில் இருசக்கர வாகனம்

விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்க மாவட்ட அளவிலான தேர்வு குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்க மாவட்ட அளவிலான தேர்வு குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
   இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் அவரது செய்தி குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது, விருதுநகர் மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் 2017-2018 இல், 2,790 பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனம் மானியம் விடுவிப்பதற்கு தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டது. முதற்கட்டமாக நிரந்தர ஓட்டுநர் உரிமம் உள்ள தகுதியான 2,168 விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவில் ஒப்புதல் பெற்று, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டு, இதுவரை 1565 வாகனங்களுக்கு மட்டும் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. 
அனுமதி ஆணை பெற்று மான்யம் பெறாத பயனாளிகள் தங்களது சொந்த நிதியிலோ அல்லது வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனத்தின் மூலமாகவோ 31.03.2018க்குள் இருசக்கர வாகனம் வாங்கி இருக்க வேண்டும்.
 அவர்கள் அதற்கான வாகன பதிவு சான்று நகல், பயனாளியின் நிரந்தர ஓட்டுநர் உரிம நகல், வாகனம் வாங்கியதற்கான விலைப்பட்டியல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் மானியம் கோரும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் திட்டஇயக்குநர், மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தால் சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு மானியம் விடுவிக்கப்படும். மேலும், தற்போது இரண்டாம் கட்டமாக 837 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மான்யம் விடுவிப்பதற்கு மாவட்ட அளவிலான தேர்வுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com