அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு

சிவகாசி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,


சிவகாசி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஜோசப் செல்வராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:
மாணவர்கள் பாடங்களை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் படி நடக்க வேண்டும். படிக்கும் காலங்களில் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் புரவலர் சுப.வைத்தியநாதன், அச்சங்கத்தின் மாவட்டத்தலைவர் கா.சிவபெருமாள் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக ஆர்.முத்துராஜ் வரவேற்றார். எஸ்.ஜெயக்கொடி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com