கலசலிங்கம் தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியின் 6 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.


விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியின் 6 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பல்கலைக்கழக துணைத் தலைவர் எஸ்.சசிஆனந்த் தலைமை வகித்தார். பெங்களூரு விப்ரோ நிறுவனத்தின் தேசிய தேர்வு அதிகாரி லாவணம் அம்பல்லா 291 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். சென்னை, ஜோஹோ நிறுவனத்தின் பொறியியல் துறை இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியது:
தற்போதைய தொழில்நுட்பத்தில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்களில் திறமைமிக்க பணியாளர்கள், பொறுப்புமிக்க வேலை, தேவைக்கேற்ற ஊதியம் இந்த நான்கும் இன்னும் நிறைவடையாமல் உள்ளன. இதனை அறிந்து கடின உழைப்புடன் மாணவர்கள் செயல்பட வேண்டும். பெண்கள் தலைமை அதிகாரிகளாக உயர்ந்து, மற்ற பெண்களுக்கும் வழிகாட்ட வேண்டும் என்றார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியைகள் விஜயா, தாயம்மாள், பேராசிரியர்கள் குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் எஸ்.ஹரிகிருஷ்ணன் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com