தூத்துக்குடியில் தடியடி: போலீஸார் மீது நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகர் ஆமத்தூர்

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகர் ஆமத்தூர், ஆர்.ஆர்.நகரில் அக்கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் நான்கு நாள்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. நிறைவு நாளான பிப். 20 அன்று செந்தொண்டர் அணி வகுப்பு (பேரணி) நடைபெற்றது. அப்போது, போலீஸாருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாக்குவதம் ஏற்பட்டது. இதில், உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையிலான போலீஸார், பேரணியில் சென்றவர்களை தாக்கயதில் ஒரு குழந்தை உட்பட பலர் காயமடைந்தனர்.
எனவே, தாக்குதலில் ஈடுபட்ட காவல் அதிகாரி செல்வநாகரத்தினத்தை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆமத்தூர், ஆர்.ஆர்.நகரில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆமத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ரெங்கநாதன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.முருகன் தொடங்கி வைத்து பேசினார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் கண்டன உரையாற்றினார்.
அதேபோல், ஆர்.ஆர்.நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.ஆதிமூலம் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பாண்டியன் துவக்கி வைத்தார்.
தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.நேரு, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.ஆரோக்கியராஜ் ஆகியோர் விளக்கிப் பேசினர். முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் மீ.சிவராமன் கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com