ஸ்ரீவில்லிபுத்தூர் கல்லூரி, பள்ளிகளில் பொங்கல் விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
     மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் தாளாளர் ஜி.எஸ். முருகேசன், முதல்வர் எம். ராணி முன்னிலையில், ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் சர்க்கரைப் பொங்கல், பால் பொங்கல், பழப் பொங்கல், கற்கண்டு பொங்கல், தேங்காய் பொங்கல், வெண்பொங்கல், கருப்பட்டி பொங்கல், பனங்கற்கண்டு பொங்கல், வாழைப்பழ பொங்கல் என 9 வகையான பொங்கலை புதுப்பானையில் செய்து அனைவருக்கும் வழங்கினர். 
     மேலும், பாரம்பரிய விளையாட்டுகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்கள், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
     பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், தாளாளர் ஜி.எஸ். குமரேசன் தலைமையில், மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பொங்கலிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், நிர்வாக அறங்காவலர்கள் டாக்டர் சித்ரா, அரவிந்த், முதல்வர் ப. முருகதாசன், துணை முதல்வர் சு. சத்தியமூர்த்தி, நிர்வாக அதிகாரி ப. அமுதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, தமிழர் திருநாளின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
    ஒயிட் ஃபீல்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில், தாளாளர் இ.டி.சி. எல். ராஜாராம் முன்னிலையில், ஆசிரியைகள் பொங்கலிட்டனர். முதல்வர் வனிதா பொங்கல் பண்டிகை சிறப்பு குறித்து உரையாற்றினார்.
    வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனம்: கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனத்தில், அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
     கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அருள்மிகு முத்துமீனாட்சியம்மன் கோயிலுக்கு முன்பாக, கல்வி நிறுவனத் தலைவர் வி.பி.எம்.எம். சங்கர், தாளாளர் பழனிச்செல்வி, துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ். தங்கபிரபு முன்னிலையில் மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
    மஞ்சள், கரும்பு, முக்கனிகள், பலவகைக் காய்கறிகள் சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டு,  உழவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. விழாவில், அனைவருக்கும் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. 
    விழாவில், அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில், இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. முன்னதாக, கல்வி இயக்குநர் டாக்டர் ரா. சபரிமாலா வரவேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com