ஸ்ரீவிலி.யில் "அன்புச் சுவர்' திட்டம்: எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருப்போர் இல்லாதோருக்கு உதவும் அன்புச் சுவர் என்னும் அமைப்பை, தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு. சந்திரபிரபா சனிக்கிழமை தொடக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருப்போர் இல்லாதோருக்கு உதவும் அன்புச் சுவர் என்னும் அமைப்பை, தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு. சந்திரபிரபா சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் வளர்ச்சி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை எதிர்புறம், பேருந்து நிலையம் உள்நுழைவுவாயில் அருகே இருப்போர் கொடுக்க, இல்லாதோர் எடுக்க என்ற குறிக்கோளுடன் அன்புச் சுவர் என்னும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களிடமுள்ள உபயோகித்த, இல்லாதோர் பயன்பெறும் வகையில் உள்ள பொருள்களை இந்த அன்புச் சுவரில் கொண்டு வந்து வைக்கலாம். இந்தப் பொருள்களை தேவைப்படுவோர் எடுத்துச் செல்லலாம். இதற்காக, இங்கு ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
தாங்கள் பயன்படுத்திய துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், காலணி, பேனா, நோட்டுகள், புத்தகங்கள் உள்ளிட்ட எந்தப் பொருளையும் கொண்டு வந்து இங்கு வைக்கலாம்.
இந்தத் திட்டத்தை, சட்டப்பேரவை உறுப்பினர் மு. சந்திரபிரபா திறந்து வைத்தார். நகர் வளர்ச்சி இயக்கத்தின் தலைவர் எக்ஸ்னோரா சந்திரன் திட்டம் குறித்து விளக்கினார்.முதல் நாளான சனிக்கிழமை ஏராளமானோர் பிறருக்குப் பயன்படும் வகையிலான பொருள்கள், ஆடைகள் உள்ளிட்டவற்றை அன்புச் சுவரில் வைத்தனர். இதனை தேவைப்பட்டோர் எடுத்துச் சென்றனர்.
இது குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை 93641-87642 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூறலாம். பொதுமக்களிடம் இத் திட்டத்துக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com