18 ஆண்டுகளுக்குப் பின்னர் சுத்தமடம் கோயில் திருவிழா கொடியேற்றம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் சுத்தமடம் கிராமத்தில் உள்ள சாது காமாட்சியம்மன் கோயில் ஆனித்திருவிழா 18 ஆண்டுகளுக்குப் பின் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் சுத்தமடம் கிராமத்தில் உள்ள சாது காமாட்சியம்மன் கோயில் ஆனித்திருவிழா 18 ஆண்டுகளுக்குப் பின் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
   இக்கோயிலை தங்கள் குலதெய்வமாகக் கொண்ட தூத்துக்குடி பகுதி  எல்விபுரம் மக்களும் சுத்தமடம் கிராம மக்களும் சேர்ந்து திருவிழாவை நடத்துகின்றனர். மொத்தம் பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
  இதனைத்தொடர்ந்து அம்மனை வேண்டி காப்பு கட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 9 ஆம் நாள் திருவிழாவன்று பூக்குழி இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர். மறுநாள் பத்தாம் திருவிழாவில் அம்மன் பூப்பல்லக்கில் திருவீதி உலா வருவார். பல்வேறு காரணங்களால்  நிறுத்தப்பட்டிருந்த இத்திருவிழா 18 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கொண்டாடப்படுவதால் கிராம மக்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com