சாத்தூர் அருகே மேற்கூரையில்லாமல் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைப்பு: பயணிகள் அவதி

சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் பெயரளவில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் பெயரளவில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் நான்குவழிச்சாலை அமைக்கபட்ட பின்னர்  சாலையோரத்தில் உள்ள கிராம மக்கள் பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்படாமல் இருந்தது. இதனால்  குமரலிங்காபுரம், நடுவபட்டி, எட்டூர் வட்டம், வெங்கடாசலபுரம், சாத்தூர், ஓடைபட்டி, பெத்துரெட்டிபட்டி, உப்பத்தூர் உள்ளிட்ட கிராம மக்கள் பேருந்துக்காக வெயிலிலும்,மழையிலும் காத்திருக்கும் சூழ்நிலைக்கு தள்ளபட்டனர். 
 பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு சில பகுதிகளில் மட்டும் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கபட்டன.  
இதில் எட்டூர்வட்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் மேற்கூரைகள் பொருத்தப்படாமல் அரைகுறையாக பணிகள் நடைபெற்றுள்ளன.இதனால் இந்த நிழற்குடைகள் தற்போது யாருக்கும் பயன்பாடில்லாமல் 
காட்சிப் பொருளாகவே உள்ளன.  மேலும் ஒடைபட்டி,பெத்துரெட்டி,கரிசல்பட்டிஉள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தமே அமைக்கப்படவில்லை. எனவே அரைகுறை நிழற்குடைகளை சரி செய்ய வேண்டும் என்றும் விடுபட்ட கிராம பகுதிகளுக்கு பேருந்து நிறுத்த நிழற்குடைகளை  அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com