விருதுநகர் மாவட்டத்தில் வீடு தேடி வரும் சட்ட உதவி முகாம் தொடக்கம்

விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், வீடு தேடி வரும் சட்ட உதவி முகாம் தொடக்க விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த

விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், வீடு தேடி வரும் சட்ட உதவி முகாம் தொடக்க விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அ.முத்துசாரதா தலைமை வகித்தார். சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலாளர் நீதிபதி ஜெ.கிறிஸ்டல் பபிதா முன்னிலை வகித்தார்.
வீடு தேடி வரும் சட்ட உதவி முகாம் வாகனத்தை மாவட்ட அமர்வு நீதிபதி அ.முத்துசாரதா கொடியசைத்துத் தொடங்கி வைத்துப் பேசியது:
          மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு, வீடு தேடி வரும் சட்ட உதவி முகாம் என்ற சிறப்பு வாகனத்தை வடிவமைத்து மாநிலம் முழுவதற்கும் அனுப்பி வைத்து சட்ட உதவி மையத்தின் பணிகளை மக்களிடம் எடுத்துரைக்க முடிவு செய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தொடக்கி வைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் 13-ஆம் தேதி (செவ்வாய்கிழமை) முதல் 17-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கி ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள ஒவ்வொரு கிராமமாகச் செல்லும். இந்த வாகனத்தில் வழக்குரைஞர்கள் மற்றும் தன்னார்வ சட்டப் பணிக்குழு உறுப்பினர் இருப்பார்கள். அப்போது மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, சட்ட உதவிகள் வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் மாவட்ட குடும்ப நல நீதிபதி கே.சிங்கராஜ், மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் வசந்தி, சார்பு நீதிபதி சி.கதிரவன், நீதித்துறை நடுவர் எம்.பரமசிவம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.ஆனந்தி மற்றும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com