சாத்தூரில் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம்

சாத்தூரில் நான்கு வழிச்சாலை அருகே வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

சாத்தூரில் நான்கு வழிச்சாலை அருகே வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
சாத்தூர் நான்குவழிச்சாலையின் இருபுறத்திலும் அணுகு  சாலை அமைக்கபட்டது. மழைகாலங்களில் நான்கு வழிச்சாலையில் தண்ணீர் தேங்காதவாறும், சாலையில் ஓடும் தண்ணீர் அனைத்தும் அணுகு சாலை வழியாக வந்து, சர்வீஸ் சாலை ஓரத்தில் அமைக்கபட்டிருக்கும் வாருகாலில் கலக்கிறது.
இங்கு வாய்க்கால் தண்ணீர் சாலையில் தேங்குவதாக பொதுமக்கள் கூறிய புகார்களை அடுத்து, நெடுஞ்சாலைதுறை சார்பில், வாருகாலின் சிமெண்ட மூடிகள் திறக்கபட்டன. இந்த வாய்க்கால் மூடிகள் திறக்கபட்டு இரண்டு ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை  சுத்தம் செய்யபடவில்லை. வாய்க்காலை மூடவும் இல்லை.  
இதனால் இப்பகுதியில் அதிகமாக துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மழைகாலங்களில் தண்ணீர் சாலையிலே தேங்கி நிற்கிறது.  இதனால்  இவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
இதுகுறித்து சாத்தூரச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர் கூறுகையில்: அணுகு  சாலையில் கிழக்கு, மேற்குமாக உள்ள இரண்டு அணுகு சாலையிலும் மழை காலங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கிறது. மேலும் கழிவு நீரும் கலப்பதால் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் நெடுஞ்சாலைதுறைக்கு மனுஅளித்தும்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com