சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா தேரோட்டம்

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோயிலின் புரட்டாசி பொங்கல் விழாவில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோயிலின் புரட்டாசி பொங்கல் விழாவில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
   சொக்கநாதன்புத்தூர் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட இக் கோயிலின் புரட்டாசி பொங்கல் விழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாள்களாக நடைபெற்று வருகிறது. விழாவில் நித்யானந்த விநாயகர், வடகாசியம்மன், பத்ரகாளியம்மன் ஆகிய சுவாமிகள் தட்டிச்சப்பரம், சிங்கவாகனம், ரிஷபவாகனம், புஷ்பவாகனம், தண்டியல் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.
   மேலும் கிராமிய பக்தி பாடல்கள், வில்லிசை, பட்டிமன்றம், நாதஸ்வர கச்சேரி, கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன், ஏ.கே.ஆர். நிறுவனங்களின் தலைவர் காமராஜ், செல்வி, ராஜ்ப்ரியம், இனியா ஸ்னேகா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து 1500-க்கும் மேற்பட்டோர் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலையில் முளைப்பாரி வீதி உலாவும், வாண வேடிக்கை நிகழ்ச்சியும்  நடைபெற்றன. 
    விழா ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை நாட்டாண்மைகள் மாடசாமி, அய்யப்பன். காளிதாஸ், குருக்களஞ்சியம், நிர்வாக குழு உறுப்பினர்கள், கணக்கர் செல்வம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com