அருப்புக்கோட்டையில் கம்பன் கழக சொற்பொழிவு

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சிச் சொக்கநாதர் ஆலய வளாகத்தில் கம்பன் கழகம் சார்பாக

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சிச் சொக்கநாதர் ஆலய வளாகத்தில் கம்பன் கழகம் சார்பாக 346 ஆவது ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 
கம்பன் கழகப் புரவலரும், தமிழக அரசின் காமராசர் விருது பெற்றவருமான  தொழிலதிபர் டி.ஆர்.தினகரன் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். விக்கிரமசிங்கபுரம் வி.இளங்கோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ராமாயணத்தில் கடமை உணர்வு' எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். கம்பன் கழகத் துணைச் செயலாளர் கு.செல்வம் வரவேற்றார். இணைச் செயலாளர் புலவர் கண.கணேசன் நன்றி கூறினார்.  
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சத்தியசாயி சேவா சமிதி குழுவினரின் பக்திப் பாடல் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விவேகானந்தா கேந்திரம் சார்பில் சிறப்புப் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கம்பன் கழக துணைச் செயலாளர்கள் பி.கோடீஸ்வரன், வே.நாகராஜ், எஸ்.பால்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com