சிவகாசி நகராட்சியில் அனுமதியற்ற  மனைகளுக்கு அங்கீகாரம் பெறலாம்

சிவகாசி நகராட்சிப் பகுதியில் உள்ள அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகம்

சிவகாசி நகராட்சிப் பகுதியில் உள்ள அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
   இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிவகாசி நகராட்சிப் பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன் முறைப்படுத்துதல் சம்பந்தமாக தமிழக அரசின், அனுமதியற்ற மனைகள் வறைமுறைப்படுத்துதல் சட்டத்தின்கீழ் விற்பனை செய்யப்பட்ட தனித்த மனைகளுக்கு உடனடியாக மனைகளை முறைப்படுத்திக் கொள்ள நகராட்சி அலுவலகத்தை அணுக வேண்டும்.
ஒரு மனைக்கு கூராய்வு கட்டணம் ரூ. 500, வளர்ச்சிக் கட்டணம் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.60, அபிவிருத்திக் கட்டணம் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.250 என்ற அளவில் கட்டணம் செலுத்தி மனைகளுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட ரசீது நகல், இடப் பத்திரப் பதிவு ஆவண நகல், மனைப் பிரிவு வரைபட நகல் ஆகியவையே மனைகளை வரன்முறைப்படுத்த தேவையான ஆவணங்களாகும். மேலும் விபரங்களுக்கு நகர அமைப்பு ஆய்வாளரை அணுகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com