சிவகாசி பகுதியில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் அவதி

சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்தடையால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்தடையால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் தினசரி காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. மின்தடை நேரத்தில் தினசரி  மாற்றம் செய்யப்படுகிறது. 
இதனால், சிவகாசியில் பிரதான தொழில்களில் ஒன்றான அச்சுத் தொழில் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் பாதிக்கப்படுகின்றன. 
தற்போது, அச்சகங்களில் 2019 ஆம் ஆண்டுக்கான டைரி, தினசரி மற்றும் மாத காலண்டர்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின் தடையால், இவற்றின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மின்தடை செய்யப்படுமாயின், அதற்கேற்றார்போல் வேலையை அமைத்துக் கொள்ள முடியும். ஆனால், எந்த நேரத்தில் மின்தடை ஏற்படும் என்பது தெரியவில்லை என்பதால், உற்பத்தி பாதிக்கப்படுகிறது என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, மின்வாரியம் மின்தடை ஏற்படும் நேரங்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். 
 இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியது: சிவகாசி பகுதிக்கு கயத்தாறில் உள்ள மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வருகிறது. 
வழக்கமாக வரும் மின்சாரத்தின் அளவை விட தற்போது குறைவாக வருவதால், மின்தடை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.விரைவில் சீரமைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com