அருப்புக்கோட்டை வேளாண் மையத்தில் தூத்துக்குடி விவசாயிகளுக்கு பயிற்சி

அருப்புக்கோட்டைவேளாண்மை அறிவியல் நிலையத்தில் தூத்துக்குடி விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை

அருப்புக்கோட்டைவேளாண்மை அறிவியல் நிலையத்தில் தூத்துக்குடி விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை விதை நேர்த்தி மற்றும் விதை முலாம் பூச்சுப்பயிற்சி அளிக்கப்பட்டது.
 கோவிலாங்குளத்தில் உள்ள இந்நிலையத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீர்ப்பிடிப்புப் பகுதி மேலாண்மைத் திட்டத்தின்கீழ் 215 விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியின்போது வேளாண்மை அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் அங்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு  பயிற்சி விபரங்கள் பற்றியும் விஜயலட்சுமி விளக்கமளித்தார். 
வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் பாக்கியத்து சாலிகா, புரட்டாசிப் பட்டத்தில் பயிர்செய்யும் விவசாயிகளுக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்களைக்கொண்டு விதை நேர்த்தி செய்து உலர வைத்து விதைக்கவேண்டுமென எடுத்துரைத்தார். 
அத்துடன் டி.ஏ.பி, புங்கம் இலைக் கரைசல் மற்றும் துத்தநாக சல்பேட் கொண்டு விதை முலாம் பூசி விதைத்தால் வறட்சியினைத் தாங்கும் தன்மையுடன் பயிர்கள் வளரும் எனத் தெரிவித்தார். மேலும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் குமார், மணோன்மணி,விஜயக்குமார் ஆகியோர் விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் ஈட்ட  கால்நடை வளர்ப்பு,காளான் வளர்ப்பு,சத்தான உணவுப் பண்டங்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com