சம்பா பயிருக்காக தயாராகும் நாற்றுகள்

காரைக்காலில் சம்பா சாகுபடிக்கான பணிகளை தொடங்கிய விவசாயிகள் நடவுக்காக, நாற்றுகளை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சம்பா பயிருக்காக தயாராகும் நாற்றுகள்

காரைக்காலில் சம்பா சாகுபடிக்கான பணிகளை தொடங்கிய விவசாயிகள் நடவுக்காக, நாற்றுகளை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் கடைமடைப் பகுதிக்கு காவிரி நீர் 6 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வேண்டும். மேட்டூர் அணை திறக்கப்பட்டு கல்லணை வந்து சேர்ந்த தண்ணீர் வியாழக்கிழமை வரை காரைக்காலுக்கு வரவில்லை. காவிரி நீரை எதிர்பார்த்து விவசாயிகள் சம்பா பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

நெடுங்காடு பகுதியில் பத்தக்குடி உள்ளிட்ட தமிழகத்தையொட்டியுள்ள விளைநிலங்களில் நாற்றுகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. திருநள்ளாறு பகுதி பூமங்களம், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாற்றங்கால் தயார் செய்வற்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

 கோட்டுச்சேரி, மேலவெளி சுற்றுப் பகுதியிலும் இதேபோல காவிரித் தண்ணீரை எதிர்பார்த்து விவசாயிகள் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் 67 இடங்களில் ஆழ்துளைக் குழாய் பாசன வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இந்த இடங்களைச் சார்ந்த விளைநிலங்களில் நாற்றுகள் தயார் செய்தல், நடவுப் பணிகள் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி க.தேவமணி கூறியது:

 கடந்த ஆண்டு காரைக்கால் பகுதிக்குள் ஆகஸ்ட் 20-ஆம் தேதி காவிரி தண்ணீர் வந்துவிடப்பட்டது. நிகழாண்டு கல்லணை திறந்து 6 நாள்களாகியும் இதுவரை காரைக்கால் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. காவிரியை நம்பி விவசாயிகள் காரைக்கால் மாவட்டத்தில் சம்பா பயிர் செய்வதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

குளம் மற்றும் சிறிய நீர்நிலைகளில் தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார் பம்புசெட் மூலம் எடுத்து, நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
பத்தக்குடியில் மட்டும் சுமார் 50 ஏக்கர் பரப்பில் நாற்றுகள் உற்பத்தி செய்து நடவுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

காவிரி தண்ணீர் தாமதத்தால் குறுகிய கால பயிரான ஆந்திரா பொன்னியை விவசாயிகள் பலர் விதைத்துள்ளனர். ஆந்திரா பொன்னி நடவு முடிந்த பிறகு காவிரித் தண்ணீரின் தேவை மிகவும் அவசியமாகும். இதை நம்பியே விவசாயிகள் பயிர் செய்யத் தொடங்கியுள்ளனர். காவிரி நீரின் தேவையை உணர்ந்து, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com