திருநள்ளாறில் ரூ.1.35 கோடியில் தீர்த்தக் குளங்கள் சீரமைப்புப் பணி தொடக்கம்

திருநள்ளாறு கோயில் அருகேயுள்ள எமன் தீர்த்தம், பொய்யாக்குளம் ஆகியவை ரூ.1.35 கோடியில் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

திருநள்ளாறு கோயில் அருகேயுள்ள எமன் தீர்த்தம், பொய்யாக்குளம் ஆகியவை ரூ.1.35 கோடியில் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பயன்படுத்தும் தீர்த்தமாக நளன் குளம் உள்ளது. மேலும் கோயில் அருகாமையில் சரஸ்வதி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவையும் தண்ணீர் நிரப்பப்பட்டு பயன்பாட்டில் இருந்துவருகிறது. இந்நிலையில், கோயில் ராஜகோபுரத்துக்கு தென்புறம் எமன் தீர்த்தம் பயன்பாடின்றி இருந்து வந்த நிலையில், அதை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தார். கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே.பன்னீர்செல்வம், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் வி.சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் ஜி.இளஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எமன் தீர்த்த குளம் ரூ.60 லட்சம் செலவில் 6 மாத காலத்துக்குள் சீரமைக்கப்படும். பொய்யாக்குளம் என அழைக்கப்படும் அகத்தீசுவரர் தீர்த்தக் குளம் ரூ.75 லட்சம் செலவில் சீரமைக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
வலத்தாமங்கலம் கிராமம் நூலாற்றின் கரையை 100 மீட்டர் தூரம் பலப்படுத்தி தடுப்பு சுவர் அமைக்க வேளாண் துறை நிதி ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணியும் அமைச்சரால் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com