அகத்தீசுவரர் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

காரைக்கால் அருகேயுள்ள பத்தகுடி கிராமத்தில் உள்ள பழைமையான ஸ்ரீ அகத்தீசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கின.

காரைக்கால் அருகேயுள்ள பத்தகுடி கிராமத்தில் உள்ள பழைமையான ஸ்ரீ அகத்தீசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கின.
திருநள்ளாறு கொம்யூன், பத்தகுடி கிராமத்தில் ஸ்ரீ அகிலாண்டநாயகி சமேத ஸ்ரீ அகத்தீசுவரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 55 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கோயில் முகப்பில் புதிதாக சாலகோபுரம் அமைக்கப்பட்டு, ஸ்ரீ துர்கா, ஸ்ரீ சரஸ்வதி, நவகிரகங்கள் சன்னிதி உருவாக்கப்பட்டுள்ளன. குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 30) நடைபெறவுள்ளது.
குடமுழுக்கையொட்டி வெள்ளிக்கிழமை காலை பிரசன்னாபிஷேகம், மூர்த்தி ஹோமம் செய்யப்பட்டது. இரவு யாகசாலையில் முதல் கால சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூர்ணாஹுதி தீபாராதனை செய்யப்பட்டது. சனிக்கிழமை காலை 2-ஆம் கால பூஜையும், இரவு 3-ஆம் கால பூஜையும் செய்யப்படுகிறது.
குடமுழுக்கு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு 4-ஆம் கால பூர்ணாஹுதி செய்யப்பட்டு, 9.45 மணிக்கு விமான குடமுழுக்கு செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com