ஒப்பில்லாமணியர் கோயிலில் திருமண காட்சித் திருவிழா மே 1 -இல் தொடக்கம்

காரைக்கால் ஸ்ரீ சௌந்தராம்பாள் சமேத ஸ்ரீ ஒப்பில்லாமணியர் கோயிலில் 5 நாள்கள் நடைபெறக்கூடிய, அகத்தியருக்கு சிவபெருமான் அருளிய திருமணக் காட்சித் திருவிழா மே 1- ஆம் தேதி தொடங்குகிறது.

காரைக்கால் ஸ்ரீ சௌந்தராம்பாள் சமேத ஸ்ரீ ஒப்பில்லாமணியர் கோயிலில் 5 நாள்கள் நடைபெறக்கூடிய, அகத்தியருக்கு சிவபெருமான் அருளிய திருமணக் காட்சித் திருவிழா மே 1- ஆம் தேதி தொடங்குகிறது.
காரைக்கால் வடமறைக்காடு பகுதியில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் சிவபெருமான் அகத்தியருக்கு தமது திருமணக் காட்சியை அருளிய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீ விநாயகர் வழிபாடு, பகல் 12 மணிக்கு ஸ்ரீ விநாயகர் வீதியுலா நடைபெறுகிறது.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை சுவாமிகளுக்கு அபிஷேகம், மாலை சுவாமிகளுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு அகத்திய முனிவர் தென்புலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஸ்ரீ உச்சி காளியம்மன் கோயிலில் இருந்து வரிசை கொண்டுவரப்பட்டு, 7 மணிக்கு ஸ்ரீ ஒப்பில்லாமணியர் - ஸ்ரீ சௌந்தராம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி - அம்பாள் புறப்பாடு நடைபெறுகிறது. இதுவே இந்த திருவிழாவின் முக்கியமான நிகழ்ச்சியாகும்.
மே 3-ஆம் தேதி ஸ்ரீ துர்கை மற்றும் ஸ்ரீ செளந்தராம்பாளுக்கு சந்தனக் காப்பு அலங்காரம், திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 4-ஆம் தேதி இரவு 108 சங்கு கலசாபிஷேகம், 5-ஆம் தேதி விடையாற்றியுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com