மதுபானக் கடை அமைப்பதை எதிர்த்து தொடர் காத்திருப்புப் போராட்டம்

திருப்பட்டினத்தில் மேலையூர் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டு வரும் மதுபானக்கடையை அகற்றக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பட்டினத்தில் மேலையூர் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டு வரும் மதுபானக்கடையை அகற்றக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பட்டினம் கடைத்தெருவில் நடைபெற்ற போராட்டத்துக்கு கிளைத் தலைவர் எஸ். மணிமேகலை தலைமை வகித்தார். துணைத்தலைவர் டி. லீலிஸ்மேரி முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ. வின்சென்ட், மாவட்ட செயலர் கலியபெருமாள், விவசாயிகள் சங்க செயலர் தமீம், மாதர் சங்க நிர்வாகிகள் சுமதி, சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றும் அரசின் முயற்சியை கைவிட வேண்டும். பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். குடியிருப்பு பகுதியில் மதுபானக் கடைகளைத் திறக்க நடவடிக்கைகள் எடுப்பதை கைவிட வேண்டும். திருப்பட்டினம் மேலையூர் பகுதியில் கோயில், தேவாலயம், பள்ளிக்கூடம், தலித் குடியிருப்பு உள்ளிட்டவை அமைந்துள்ள பகுதியில் கட்டப்பட்டு வரும் மதுபானக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது.
இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறுகையில், மேலையூர் பகுதியில் மதுபானக் கடை அமைக்கும் முடிவை கைவிடும் வரையில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com