இஸ்லாமிய மாணவ -மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இஸ்லாமிய மாணவ- மாணவியர்  உயர்கல்விக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மாணவ- மாணவியர்  உயர்கல்விக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :  புதுச்சேரி மாநில வக்ஃபு வாரியம், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய சிறுபான்மை மாணவ -மாணவியருக்கு 2017-18-ஆம் கல்வியாண்டில் மேல்நிலை, தொழில்நுட்பக் கல்வி, கலைக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மற்றும் மருத்துவம், பொறியியல் மற்றும் இதர கல்வி பயிலும் மாணவ- மாணவியருக்கு வருடாந்திர உதவித்தொகை வழங்கவுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 90 சதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ -மாணவியர், கல்லூரிகளில் இளநிலை, முதுநிலையில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவ -மாணவியர் ஊக்கத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தாங்கள் படித்த பள்ளி, கல்லூரி மற்றும் புதுச்சேரி வக்ஃபு வாரிய அலுவலகத்தை (போன் 0413-234368) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை   வக்ஃபு வாரியத்தில் செப்.30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். மருத்துவம், பொறியியல் மற்றும் இதர தொழில்சார்ந்த கல்வி பயில்வோர் தங்களது விண்ணப்பத்தை அக்.31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com