திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்

காரைக்காலில் பல்வேறு அரசுத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும் என, அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் அறிவுறுத்தினார்.

காரைக்காலில் பல்வேறு அரசுத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும் என, அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் அறிவுறுத்தினார்.
காரைக்காலில் ஆதிதிராவிடர் சிறப்புக் கூறு திட்ட ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துறை வாரியாக ஆதிதிராவிடர் திட்டங்கள், திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி, செலவு செய்த விவரங்கள், முடங்கியிருக்கும் திட்டப்பணிகள், தீர்வுக்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
பின்னர், ஆட்சியர் பேசியது:
ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உரிய காலத்தில் வழங்க வேண்டும். ஆதிதிராவிடர்கள் குடியிருப்பு பகுதிகளில், புதுச்சேரி ஆதிதிராவிடர் மேம்பாட்டு முகமை மூலம் அடிப்படை வசதிகள் செய்துத்தரவேண்டும். ராஜீவ்காந்தி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மானியத் தொகையை 3 தவணைகளாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் காய்கறி, மலர், பழ பயிர் சாகுபடி செய்வோருக்கான சலுகைகளை வேளாண் துறை முறையாக செயல்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடின்றி வைத்திருக்க நலவழித்துறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். கோட்டுச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு துணை நூலகத்தை திறக்க ஏற்பாடு செய்யவேண்டும். அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளிலும், ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட பணிகளை உரிய காலக்கெடுவுக்குள் முடிக்க அதிகாரிகள் முனைப்பு காட்டவேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் வி.சண்முகசுந்தரம் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com