வீடுகள் அருகே கழிவுநீர் தேங்காமலிருக்க வேண்டும்: பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை

வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்காமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் அறிவுறுத்தினார்.

வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்காமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் அறிவுறுத்தினார்.
தூய்மையான, பசுமையான காரைக்கால் என்ற திட்டத்தின்படி, வாரந்தோறும் சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில், நெடுங்காடு பகுதியில் மாரியம்மன் கோயில் அருகே தூய்மைப் பணி தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர் சுமார் 100 பேர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் துப்புரவுப் பணியைத் தொடங்கிவைத்தார்.
அப்போது, அவர் பேசியது:
வீடுகளின் அருகே கழிவுநீர் தேக்கத்தாலும், சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதாலும் சுகாதாரக் கேடு உருவாகிறது. எனவே, வீட்டின் கழிவுநீரை தோட்டம், கொல்லையில் ஆழமான பள்ளம் தோண்டி, அதில் செங்கல் ஜல்லிக் கற்களைப் பரப்பி, கழிவுநீரை விடவேண்டும். அவ்வாறு செய்யும்போது, கழிவுநீர் வெகுவாக உறிஞ்சப்பட்டுவிடும்.
அதுபோல், கழிவுநீர் செல்லும் பாதையில் வாழைக் கன்று வளர்த்தால், தண்ணீர் வெகுவாக உறிஞ்சப்படும். இதன் மூலம் ஓரளவு கொசு உற்பத்தியை கட்டப்படுத்தமுடியும்.
வாரத்தில் ஒரு முறையாவது அந்தந்த பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து அவர்களது பகுதியை தூய்மை செய்ய முன்வரவேண்டும். குடியிருப்பு அருகே உள்ள குளங்களில் குப்பைகளை கொட்டாமல் பொதுமக்கள் நீர்நிலைகளைக் காக்கவேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து, மாணவர் அந்த பகுதியில் வீடு வீடாக சென்று துப்புரவு விழிப்புணர்வு பணியை மேற்கொண்டனர். மேலும், சாலையோரத்தில் கிடந்த குப்பைகளை, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவுப் பணியாளர்களுடன் சேர்ந்து அகற்றினர்.
நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் மகாலிங்கம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் காளிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com