பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கொம்யூன் பகுதிகளிலும் மகளிர் காவல் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பது இவர்களின் பணியாகும்.
இந்நிலையில், திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த மகளிருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மகளிர் காவல் தன்னார்வலர்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் கூட்டம் போலகம் சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் வம்சீதரரெட்டி கலந்துகொண்டு,  பெண்கள் சந்திக்கும் சமூக பிரச்னைகள் குறித்து காவல்துறைக்கு எவ்வாறு தெரிவிப்பது, குற்றச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க பெண்கள் மேற்கொள்ளவேண்டியவை போன்றவை குறித்து விளக்கிப் பேசினார்.
பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பு, பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கான தண்டனை உள்ளிட்ட விவரங்கள் குறித்த கையேடுகள் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்டன. மேலும், காரைக்காலில் தொடங்கப்பட்ட பெண்கள் பாதுகாப்பு மிஷன் செயல்பாடுகள், மிஷன் செல்லிடப்பேசிக்கு வரும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து போலீஸார் விளக்கிக் கூறினர். குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், சைல்டு லைன் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட மகளிர் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு காவல்துறையினர் விளக்கமளித்தனர்.
இக்கூட்டத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, காவல் ஆய்வாளர் மரிய கிறிஸ்டின் பால், உதவி ஆய்வாளர் ஜெரோம், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் விமலா உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com