பணி நிரந்தரம் கோரி அரசுத் துறை தாற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசுத் துறைகளில் நீண்ட காலமாக தாற்காலிக அடிப்படையில் பணியாறிவரும் ஊழியர்கள், பணி நிரந்தரம் கோரி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசுத் துறைகளில் நீண்ட காலமாக தாற்காலிக அடிப்படையில் பணியாறிவரும் ஊழியர்கள், பணி நிரந்தரம் கோரி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்கால் மாவட்ட அனைத்து அரசுத் துறை தாற்காலிக ஊழியர் சங்கத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தலைவர் ஜெ. இளையராஜா தலைமை வகித்தார். கடந்த 2005-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் தாற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றிவரும் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது காரைக்காலில் எம்.டி.எஸ். என்கிற பல்நோக்கு பணியாளர் நிலை பணியிடங்களில் 130 இடங்கள் காலியாக உள்ளன. இதில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தாற்காலிகமாக பணியாற்றுவோரைக் கொண்டு நிரப்பவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், செப்டம்பர் மாதத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் அறிவித்தனர்.
காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கௌரவத் தலைவர் ஜி. ஜார்ஜ், தலைவர் எம்.எல். ஜெய்சிங், பொதுச்செயலர் பி.வி. சுப்ரமணியன், இணை செயலர் எஸ். கோபால் மற்றும் தாற்காலிக ஊழியர் சங்க செயலர் இ. கிரி, பொருளாளர் என். சுப்ரமணியன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com