பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி

காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளியில், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களின் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளியில், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களின் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் கே. செல்லையன் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். பள்ளி முதல்வர் எஸ். கந்தசாமி, துணை முதல்வர் தே. சுமதி ஆகியோர் கண்காட்சியின் நோக்கம் குறித்துப் பேசினர். ஆற்றல் வகைப்பாடு, வேளாண்மை, மாசுக் கட்டுப்பாடு, மழைநீர் சேகரிப்பு, மின் உற்பத்தி, உலக வெப்பமயமாதலை தடுத்தல் உள்ளிட்ட அறிவியல் மாதிரிகள், மூலிகைச் செடிகள், போக்குவரத்து சாதனங்கள், விலங்குகளின் வாழ்விடம் போன்றவற்றை விளக்கும் மாதிரிகள் என சுமார் 500 படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன. இது குறித்து பார்வையாளர்களுக்கு படைப்புகளை உருவாக்கிய மாணவ, மாணவியர் விளக்கமளித்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து, சிறந்த மாதிரிகளை தேர்வு செய்தனர். இக்கண்காட்சியை சுமார் 2 ஆயிரம் மாணவ மாணவியர், பெற்றோர்கள் பார்வையிட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com