சனிப்பெயர்ச்சியின்போது சன்னிதியில் நெருக்கடியைத் தவிர்க்க நடவடிக்கை: எம்.எல்.ஏ. வலியுறுத்தல் 

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியின்போது, சன்னிதியில் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் உள்ளிட்டோரின்  நெருக்கடியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியின்போது, சன்னிதியில் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் உள்ளிட்டோரின்  நெருக்கடியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் வலியுறுத்தியுள்ளார். 
காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன், மாவட்ட ஆட்சியரும், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் தனி அலுவலருமான ஆர். கேசவனை புதன்கிழமை சந்தித்தார். அப்போது, திருநள்ளாறில் டிச. 19-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. சரியாக காலை 10.1 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும். இக் கோயில் சன்னிதி சிறிய அளவில் உள்ளதால் சுமார் 100 முதல் 200 பேர் வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். ஆராதனை நேரடி ஒலிபரப்பு செய்யப்படுவதால், பல்வேறு இடங்களில் உள்ள பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் காண்பர்.
ஆனால், சன்னிதியில் ஆராதனை நேரத்தில் சிவாச்சாரியார்கள் அதிகமானோர் சூழ்ந்துவிடும்போது, நேரடி ஒலிபரப்பினால் பக்தர்கள் திருப்தியாக ஆராதனையைக் காணமுடியாத நிலை ஏற்படுகிறது. இதேபோல், சன்னிதி பகுதியில் நிற்கும் பக்தர்களாலும் பாதிப்பு ஏற்படுகிறது.  முந்தைய சனிப்பெயர்ச்சி விழாக்களில் கிடைத்த அனுபவங்களாகும். சிவாச்சாரியார்களை அழைத்து கோயில் நிர்வாகம் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும். இந்த நிலை வரும் 19-ஆம் தேதியும் ஏற்படாத வகையில், கோயில் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com