பிரச்னைகளை சுயமாக தீர்த்துக்கொள்ள மகளிர் பழகிக்கொள்ள வேண்டும்: எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா

பிரச்னைகளை சுயமாக தீர்த்துக்கொள்ள மகளிர் பழகிக்கொள்ள வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினர் சந்திரபிரியங்கா பேசினார். 

 பிரச்னைகளை சுயமாக தீர்த்துக்கொள்ள மகளிர் பழகிக்கொள்ள வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினர் சந்திரபிரியங்கா பேசினார். 
காரைக்கால் மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்ட ஒரு வார சிறப்பு முகாம் நடைபெற்று வியாழக்கிழமை நிறைவடைந்தது. முகாமின்போது, மாணவியர் மீனவக் கிராம மக்களிடையே தூய்மை, ஆரோக்கியம், சுற்றுப்புறச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டதுடன், குடும்ப உறுப்பினர்களுக்கு உள்ள நோய் குறித்து கேட்டறிந்தனர். மீனவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.
கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாம் நிறைவு விழாவில், நெடுங்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சந்திரபிரியங்கா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது: நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் மாணவ, மாணவியருக்கு பல்வேறு சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. இது தமக்கான ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளவே என எண்ண வேண்டும். குறிப்பாக திட்டத்தின் மூலம் மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளை செய்ய முடிகிறது. இதன்மூலம் நமக்கு ஒரு வகை திருப்தியும், அனுபவங்களும் கிடைக்கின்றன. 
அரசு நிகழ்ச்சிகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தினரின் பங்கு முக்கியமாக உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. மாணவர்கள் தூய்மை இந்தியா விழிப்புணர்வுப் பணியில் தீவிரம் காட்ட வேண்டும். இதில் மகளிர் பங்கு முக்கியமானது. மகளிராகிய நமது தூய்மை குறித்த பங்கு வீட்டிலும் இருக்க வேண்டும். மகளிர் சந்திக்கும் பிரச்னைகளை  சுயமாக தீர்த்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பாராட்டும் வகையில் வாழ்க்கையின் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார் சந்திரபிரியங்கா.
விழாவில், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமணபதி, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ்.எல். டெல்காஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com