நீட் தேர்வை எதிர்த்து தொடர் போராட்டம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

நீட் தேர்வை எதிர்த்து தொடர் போராட்டம், கருத்தரங்கம் மற்றும் மாணவர், பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நீட் தேர்வை எதிர்த்து தொடர் போராட்டம், கருத்தரங்கம் மற்றும் மாணவர், பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி நீட் எதிர்ப்புக் குழு சார்பில் காரைக்காலில் நீட் தேர்வு தொடர்பாக விவாதிக்கும் வகையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டம், காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி நீட் எதிர்ப்புக் குழுத் தலைவர் வீரமணி தலைமை வகித்தார்.
மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வு மூலம் தமிழக, புதுவை மாநிலங்களில் மாநில கல்வி வாரியத்தில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும், கடந்த ஆண்டு நீட் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, அதிக மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி உயிரிழப்பு, மத்திய பாஜக அரசு செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கருத்து கூறினர்.
நிறைவாக, காரைக்காலில் நீட் எதிர்ப்புக் குழு அமைத்து, அதில் பல்வேறு கட்சியினர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டனர். நீட் எதிர்ப்பு குறித்து காரைக்காலில் வருகிற 24-ஆம் தேதி கருத்தரங்கம் நடத்துவது.
தொடர்ந்து நீட் எதிர்ப்பு போராட்டம், கருத்தரங்கம் நடத்துவதோடு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அனைத்துக் கட்சியினரும் மாணவர்கள் நலன் கருதி, மக்களிடையே ஒருமித்த எதிர்ப்பு ஏற்படும் வகையில் பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச்.நாஜிம் (திமுக), மாவட்ட காங்கிரஸ் தலைவர் அ.பாஸ்கரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரசு வணங்காமுடி, மதிமுக மாவட்ட செயலர் சோ.அம்பலவாணன், இந்திய கம்யூனிஸ்ட் பிரதேச செயலர் க.தமிழழகன், தமுமுக மாவட்ட தலைவர் ஐ.அப்துல்ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலர் ராஜா முகம்மது, புதுச்சேரி மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சுவாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்புப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com