காரைக்கால் ரயில் நிலையத்தில் என்.சி.சி. மாணவர்கள் தூய்மைப் பணி

மத்திய அரசின் தூய்மை வார நிகழ்ச்சியையொட்டி, காரைக்கால் ரயில் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனர்.

மத்திய அரசின் தூய்மை வார நிகழ்ச்சியையொட்டி, காரைக்கால் ரயில் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனர்.
தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்வச்தா பக்வாடா என்கிற தூய்மை வாரம் கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.
காரைக்காலில் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அமைப்பு சார்பில், ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. பள்ளி என்.சி.சி. அலுவலர் என். காமராஜ் தலைமையில், 100 என்.சி.சி. மாணவர்கள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தொடக்க நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வர் கே. கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசினார். தூய்மைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் இந்த தூய்மை திட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், வலிமைக்கும் என்.சி.சி. எவ்வாறு அடித்தளமாக அமைந்திருக்கிறதோ, அதேபோல சுற்றுப்புறத் தூய்மைப் பணியில் என்.சி.சி. மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. மாணவர்கள் இதுபோன்ற நற்பணிகளில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
என்.சி.சி. கமாண்டிங் அலுவலர் சி.எஸ். சர்மா, நகராட்சி ஆணையர் டி. சுதாகர், காரைக்கால்  ரயில் நிலைய மேலாளர் ஜி. முத்துக்குமார், காரைக்கால் என்.சி.சி. யூனிட் ராணுவ பயிற்றுநர்கள் பாலகிருஷ்ணன், பாலமுருகன் உள்ளிட்டோர் பேசினர்.
ரயில் நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். என்.சி.சி. மாணவர் கவின்ராஜ் வரவேற்றார். சத்ரியன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com