காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் விவகாரம்: துணைநிலை ஆளுநரிடம் பாஜக புகார்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் சிலரை மட்டும் பணி நிரந்தரம் செய்ய ஆட்சியாளர்கள் முயற்சிப்பது தொடர்பாக, துணை நிலை ஆளுநரிடம் பாஜக புகார் கூறியுள்ளது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் சிலரை மட்டும் பணி நிரந்தரம் செய்ய ஆட்சியாளர்கள் முயற்சிப்பது தொடர்பாக, துணை நிலை ஆளுநரிடம் பாஜக புகார் கூறியுள்ளது.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை காரைக்கால் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் ஜி. கணேஷ் தலைமையிலான குழுவினர், திங்கள்கிழமை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து காரைக்கால் திரும்பிய ஜி. கணேஷ் செவ்வாய்க்கிழமை கூறியது :
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன் மாதூர் பகுதியில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 58 தொழிலாளர்களில், கடந்த ஆட்சியில் 30 பேரை மட்டும் பணி நிரந்தரம் செய்து அலுவலக ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தொழிலாளர்கள் அனைவரும் ஒரே காலகட்டத்தில் பணிக்கு சேர்ந்தோம் எனவும், அனைவருக்கும் ஒரே நேரத்தில் பணி நிரந்தர ஆணை தர வேண்டும் என அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வந்த காங்கிரஸ் அரசு, கடந்த ஆட்சியில் வெளியிட்ட அரசு ஆணையை ரத்து செய்தது.
ஆனால், பணியாற்றும் தொழிலாளர்களிடையே பிளவை ஏற்படுத்தும் விதமாக, 17 பேரை மட்டும் பணி நிரந்தரம் செய்ய ஆட்சியாளர்கள் முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இது மற்ற தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே, இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது என்றார்.
பாஜக மையக் குழு உறுப்பினர் துரை. சேனாதிபதி உள்ளிட்ட பலர் ஆளுநரை சந்தித்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com