டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கான வசதிகளை மேம்படுத்த ஆலோசனை

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான வசதிகளை காரைக்கால் மருத்துவமனையில் மேம்படுத்துவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான வசதிகளை காரைக்கால் மருத்துவமனையில் மேம்படுத்துவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
காரைக்கால் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, அரசு பொதுமருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பி. சித்ரா உள்ளிட்ட மருத்துவர்கள் குழுவினர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் நிறைவில், சட்டப்பேரவை உறுப்பினர் அசனா கூறியது:  ரத்தத்தில் உள்ள செல் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு  பிளேட்லெட் என்ற கருவி முக்கியம்.  காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் இது இல்லை. இதனால் இங்கு வரக்கூடிய நோயாளிகள், உடனடியாக புதுச்சேரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இதனை போக்கும் விதத்தில் பிளேட்லெட் கருவி காரைக்கால் அரசு மருத்துவமனையிலேயே இருந்தால், உடனடியாக டெங்கு உறுதி செய்யப்பட்டு,  சிகிச்சைகள் தொடரமுடியும். இதற்கான செயல்திட்டத்தை விரைவுப்படுத்துமாறு கூட்டத்தில் கேட்டுக்கொண்டேன் என்றார்.
இதுகுறித்து மாவட் ஆட்சியர் ஆர்.கேசவன் கூறியது:
மருத்துவமனையில் பிளேட்லெட் கருவி வைப்பதற்கு உரிமம் பெறவேண்டும். உரிமம் பெறுவதற்கு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
விரைவில் உரிமம் கிடைத்துவிடும். இதன் பிறகு கருவி பொருத்தவேண்டும். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகிறது.
இதுவரை 1,017 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி கண்டறியப்பட்டு காரைக்கால் மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 9 சதவீத்தினர் மட்டுமே புதுச்சேரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அனைவரும் நல்ல நிலையில் வீடு திரும்பினர்.
மருத்துவமனையில் இதற்கான வசதிகளை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த மருத்துவமனை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com