வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

விழுதியூர் பகுதியில் சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை பணியை சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

விழுதியூர் பகுதியில் சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை பணியை சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட விழுதியூர் மற்றும் மானாம்பேட்டை பகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியில் சாலை அமைத்தல், தடுப்புச் சுவர் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி இரு கிராமங்களிலும் நடைபெற்றது. விழுதியூரில் கன்னிக்கோயில் பேட்டின் சுற்றுச்சுவர் கட்டுதல், தகரக் கொட்டகை அமைத்தல், விழுதியூர் தாமரைக்குளம் தெருவை மேம்படுத்துதல், விழுதியூர் தெற்குப்பேட், அருப்புக்குட்டை வாய்க்காலில் தடுப்புச் சுவர் கட்டுதல், விழுதியூர் மானாம்பேட்டை உட்புறச் சாலையை மேம்படுத்துதல், வடிகால் குழாய் அமைத்தலுக்கு ரூ.30 லட்சத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்ய முடிவெடுக்கப்பட்டது. 
அதன்படி, புதிய திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின்திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் என். ரவி, உதவிப் பொறியாளர் ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com