திருநள்ளாறு கோயில் நிதி ரூ.31 லட்சத்தில் இரு திட்டங்களுக்கு பூமி பூஜை:  அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் பங்கேற்பு

திருநள்ளாறு கோயில் நிதியின் மூலம் கழிப்பறை வளாகம் கட்டுதல், மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்டுதலுக்கான பணியை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

திருநள்ளாறு கோயில் நிதியின் மூலம் கழிப்பறை வளாகம் கட்டுதல், மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்டுதலுக்கான பணியை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் நிதியில் வடக்கு புறவட்டச் சாலையில் பக்தர்கள் வசதிக்காக ரூ. 40 லட்சத்தில் ஆண், பெண் இருபாலருக்கான 20 கழிப்பறை வசதிகள், 30 சிறுநீர் கழிப்பு வசதிகளுடன் இக்கட்டடம்  கட்டப்பட்டு வருகிறது. கூடுதலாக புறவட்டச்சாலையில் சுப்ராயபுரம் சந்திப்பு அருகே ரூ. 15 லட்சம் கோயில் நிதியில் கழிப்பறை வளாகம் அமைக்கப்படுகிறது. மேலும், கோயில் வளாகத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் தேக்கத் தொட்டி சிதிலமடைந்துவிட்ட நிலையில், புதிதாக கோயிலுக்கு கிடைத்த நன்கொடை நிதி ரூ.16 லட்சத்தில், கோயில் தென்மேற்கு பகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது.
இவ்விரு திட்டப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி (கோயில்கள்) எஸ்.கே. பன்னீர்செல்வம், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் ஜி. இளஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திட்டப் பணிகள் குறித்து கோயில் நிர்வாகத்தினர்  கூறியது: இவ்விரு திட்டப் பணிகளும் வரும் டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதற்குள் முடிக்கப்படும். மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி 40 அடி உயரத்தில் கட்டப்படுகிறது. இது கோயில் பயன்பாடு, கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டுக்கானதாகும்.
புறவட்டச் சாலையில் அமையும் கழிப்பறை வளாகம் இரண்டும் பயன்பாட்டுக்கு வரும்போது, புறவட்டச் சாலையில் வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com