"தூய்மை காரைக்கால்' விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பங்கேற்பு

"தூய்மை காரைக்கால்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பூவம் முதல் காரைக்கால் நகரப் பகுதி வரை ஞாயிற்றுக்கிழமை நடந்த சைக்கிள்

"தூய்மை காரைக்கால்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பூவம் முதல் காரைக்கால் நகரப் பகுதி வரை ஞாயிற்றுக்கிழமை நடந்த சைக்கிள் பேரணியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பங்கேற்றார்.
புதுச்சேரி பகுதியில் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர், அதிகாரிகளுடன் அவ்வப்போது சைக்கிளில் பேரணி நடத்தி வருகிறார்.
காரைக்காலில் இதுபோன்ற நிகழ்ச்சியை முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை அவர் மேற்கொண்டார். காரைக்கால் மாவட்ட எல்லையான பூவம் பகுதிக்கு புதுச்சேரியிலிருந்து கார் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை வந்த அவரை, மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் வி.ஜே. சந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சைக்கிள் ஓட்டியவாறு அங்கிருந்து புறப்பட்ட கிரண் பேடியுடன் ஆட்சியர், காவல்துறை  அதிகாரிகள், காவலர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள், மாணவர் காவல் படையினர் என  100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
"தூய்மை காரைக்கால்' என்ற கோஷத்தை முன்னிறுத்தி சுமார் 7 கி.மீ. தொலைவு பயணித்து காரைக்கால் நகரப் பகுதிக்கு வந்த துணை நிலை ஆளுநர், முருகராம் நகர் பகுதியில் வார சந்தைத் திடல் வழியாக, நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஆட்சியர் அலுவலகப் பகுதியில் உள்ள வி.ஐ.பி. மாளிக்கைக்கு
சென்றார்.
ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலும், மறியல் செய்யும் நோக்கிலும் சிலர் ஈடுபடலாம் என காவல்துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, முக்கிய இடங்களில் கூடுதலான காவலர்கள் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com