மாங்கனித் திருவிழா: பொம்மைகள் புதுப்பிக்கும் பணி தீவிரம்

காரைக்காலில் நடைபெறவுள்ள மாங்கனித் திருவிழாவையொட்டி பொம்மைகளைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காரைக்காலில் நடைபெறவுள்ள மாங்கனித் திருவிழாவையொட்டி பொம்மைகளைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 இத் திருவிழா வரும் ஜூலை 5-ம் தேதி பரமதத்தர் அழைப்புடன் (மாப்பிள்ளை அழைப்பு)  தொடங்குகிறது. தொடர்ந்து 6-ஆம் தேதி பரமதத்தர் - புனிதவதியார் திருக்கல்யாண உத்ஸவம், மாலை ஸ்ரீ பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு,  7-ஆம் தேதி ஸ்ரீ பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், 8-ஆம் தேதி ஸ்ரீ பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா, மாலை அமுது படையல், இரவு முத்து சிவிகையில் ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலுக்கு பரமதத்தர் - புனிதவதியார் செல்லுதல், 9-ஆம் தேதி இறைவன் காட்சித்தரும் நிகழ்ச்சி நடைபெறும்.
  சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில், பவழக்கால் சப்பரத்தில் அம்மையார் கோயிலுக்கு எழுந்தருளுகிறார்.  அப்போது சுவாமி வீதியுலாவின்போது கட்டடங்களில் இருந்தவாறு மக்கள் பக்தர்களை நோக்கி மாங்கனிகளை வீசுவர்.  அன்று மாலை தனிக்கோயில் கொண்டுள்ள அம்மையார் கோயிலில் சிவபெருமானுக்கு அமுதுபடையலிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 பழங்கால முறையில் மாப்பிள்ளை அழைப்பு, திருமணம் போன்றவற்றை சுட்டிக்காட்டும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளின்போது பொம்மைகள் பல பயன்படுத்தப்படும்.
 இதற்கு பயன்படக்கூடிய பொம்மைகளாக 40-க்கும் மேற்பட்டவை கோயிலில் உள்ளன. இவற்றை ஆண்டுதோறும் வர்ணம் பூசி புதுமைப்படுத்தப்படுவது வழக்கம். காரைக்கால்  அம்மையார் மணிமண்டபத்தில் இவற்றை தயார்படுத்தும் பணி தற்போது நடந்துவருகிறது. அடுத்த சில நாள்களில் பணிகள் நிறைவுற்று, ஊர்வலத்தில் பங்கேற்கும் பொம்மைகள் வரிசைப்படுத்தப்படும். இப்பணியை சிற்பி தனராஜன் செய்துவருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com