மலேரியா விழிப்புணர்வு முகாம்

காரைக்காலில் தேசிய மலேரியா விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் தேசிய மலேரியா விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நலவழித்துறை சார்பில் தேசிய மலேரியா விழிப்புணர்வு மாதத்தையொட்டி பொதுமக்களிடையே இதுதொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காரைக்கால் அன்னை தெரஸா செவிலியர் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கு மலேரியா குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
நலவழித்துறை துணை இயக்குநர் பி. நாராயணசாமி தலைமை வகித்தார். கொசுக்களால் பரவக்கூடிய நோய்கள், அதை தடுக்கும் முறைகளை விளக்கிய அவர், இதுகுறித்து மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து துணை இயக்குநர் விளக்கிக் கூறினார்.
மலேரியா தொழில்நுட்ப உதவியாளர் சேகர், மலேரியா அறிகுறிகள் குறித்தும், மலேரியாவை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், சிகிச்சை முறைகள் பற்றியும் மாணவ, மாணவியருக்கு விளக்கிக்கூறினார்.
இதைத் தொடர்ந்து கல்லூரியிலிருந்து மாணவ, மாணவியர் மலேரியா விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதை நலவழித்துறை துணை இயக்குநர் நாராயணசாமி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். நகரப் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் தெரிந்துகொள்ளும் வகையில், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கியவாறு மாணவ, மாணவியர் சென்றனர்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஜெயபாரதி, நலவழித்துறை சுகாதார ஆய்வாளர் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல் மற்றும் அன்னை தெரஸா கல்லூரி விரிவுரையாளர்கள் சுகந்தி, அனிதா, ஜோன்ஸ், யோகமங்களம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார உதவியாளர்கள் செல்வமதன், வேங்கடபதி, வெங்கட்ராமன், சந்தோஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com