தீ விபத்துக்குப் பின் புனரமைக்கப்பட்ட திருநள்ளாறு கோயில் அலுவலகம் பயன்பாட்டுக்கு வந்தது

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் வளாகத்தில் உள்ள கண்காணிப்புக் கேமரா கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, ரூ. 15 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட வளாகம் பயன்பாட்டுக்கு வந்தது.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் வளாகத்தில் உள்ள கண்காணிப்புக் கேமரா கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, ரூ. 15 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட வளாகம் பயன்பாட்டுக்கு வந்தது.
திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் ராஜகோபுரத்திலிருந்து 2-ஆவது கோபுரத்துக்கிடையே அலுவலகம் செயல்படுகிறது. இங்கு கோயில் சுற்றுவட்டாரத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களின் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வந்தது.
இந்த மையத்தில் கடந்த மே மாதம் 24-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், தொலைக்காட்சிப் பெட்டிகள், காட்சிப் பதிவு சாதனங்கள், மின்சார சாதனங்கள் உள்ளிட்டவை கருகி நாசமாயின.
உடனடியாக அலுவலகத்தை புனரமைக்கும் பணியை கோயில் நிர்வாகம் தொடங்கியது. அனைத்துப் பணிகளும் நிறைவுற்று அலுவலகம் வழக்கம்போல் பயன்பாட்டுக்கு வந்தது.
இதுகுறித்து கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே. பன்னீர்செல்வம் புதன்கிழமை கூறியது :
அலுவலக வளாகத்தில் உள்ள கண்காணிப்புக் கேமரா கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, கருகிப்போன பொருள்களுக்கு மாற்றாக புதிய சாதனங்கள் வாங்கப்பட்டு, அலுவலகத்துக்கு எதிரே தனி அறையில் கட்டுப்பாட்டு அறை செயல்படத் தொடங்கியுள்ளது. அலுவலக வளாகத்தில் நிர்வாக அதிகாரி அலுவலகம், மேலாளர் மற்றும் வழக்கமான பணிகள் மேற்கொள்ளும் ஊழியர்கள் கொண்டதாக, நெரிசலின்றி விரிவான முறையில் தற்போது உருவாக்கப்பட்டு பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். இதற்காக ரூ. 15 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com