திருநள்ளாறு பகுதியில் ரூ. 3 கோடியில் சாலை மேம்படுத்தும் பணி தொடக்கம்

திருநள்ளாறு பகுதியில் ரூ. 3 கோடியில் சாலை மேம்படுத்தும் பணியை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.

திருநள்ளாறு பகுதியில் ரூ. 3 கோடியில் சாலை மேம்படுத்தும் பணியை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
திருநள்ளாறு நகர் பகுதியிலிருந்து செல்லும் கீழாவூர் மற்றும் சுப்ராயபுரம் சாலை சிதிலமடைந்து காணப்படுகிறது. இதை மேம்படுத்தித் தர வேண்டும் என வேளாண் துறை அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கான மதிப்பீடுகள் பொதுப் பணித் துறையினரால் தயார் செய்யப்பட்டு, நபார்டு வங்கி மூலம் ரூ. 3 கோடியில் திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணி தொடக்க நிகழ்ச்சி திருநள்ளாறில் சனிக்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் பூமி பூஜையில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார். கீழாவூர் சாலை 2.2 கி.மீ. தூரம் அகலப்படுத்தி மேம்படுத்துதலும், சுப்ராயபுரம் சாலை 2.7 கி.மீ. மேம்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 6 மாத காலக்கெடுவுக்குள் சாலைப் பணி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ், பொதுப் பணித் துறை செயற்பொறியாளர்கள் ஏ. ராஜசேகரன், ஜி. இளஞ்செழியன், உதவிப் பொறியாளர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com