2-ஆவது கட்டமாக காரைக்காலில் முக்கிய சாலைகளில் குப்பைத் தொட்டிகள் அகற்றம்

காரைக்கால் பகுதியில் 2-ஆம் கட்டமாக குப்பைத் தொட்டிகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பகுதியில் 2-ஆம் கட்டமாக குப்பைத் தொட்டிகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமல்படுத்தப்பட்டது. வீடு வீடாக நிறுவனத்தினர் சென்று குப்பைகளை வாங்கிச் செல்கின்றனர். இதற்காக நகராட்சி நிர்வாகம் மாதம் ரூ. 38 லட்சம் செலவிடுகிறது. திட்டம் அமலில் உள்ள போதிலும், சாலையில் குப்பைகள் கொட்டப்படுவது தொடர்கிறது. இந்த நிலையில், முதல்கட்டமாக சாலையில் உள்ள குப்பைத் தொட்டிகள் அகற்றும் பணி கடந்த மாதம் நடைபெற்றது.
இந்த பணியின் 2-ஆம் கட்டமாக தெய்தாவீதி, கன்னடியர் வீதி, கைலாசநாதர் கோயில் வீதி, பெருமாள் கோயில் வீதி, மைதீன்பள்ளி வீதி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன. மாவட்ட சார்பு ஆட்சியர் ஆர். கேசவன், நகராட்சி ஆணையர் (பொ) கே. ரேவதி ஆகியோர் கலந்துகொண்டு இந்தப் பணியை தொடங்கிவைத்தனர்.
குப்பைகளை வாங்கிக் கொள்ள தனியார் நிறுவனத்தார் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு நேரில் செல்கின்றனர். எனவே, சாலையில் குப்பைகள் கொட்டக்கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சாலையோரப் பகுதியில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
எனவே சில சாலைகளில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. வீடு, நிறுவனம் தேடிவரும் நிறுவனத்தாரிடம் மட்டுமே பொதுமக்கள் குப்பைகளை கொடுக்க வேண்டும். சாலையில் குப்பைத் தொட்டி இல்லாத நிலையில், எந்த சூழலிலும் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது என அதிகாரிகள் பொதுமக்களிடம் அறிவுறுத்தனர். நிகழ்ச்சியில், குப்பை அகற்றும் பணியை மேற்கொள்ளும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com