நுகர்வோர் கலை இரவு நிகழ்ச்சிகள் இன்று தொடக்கம்

நுகர்வோருக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு வார கால கலை இரவு நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.

நுகர்வோருக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு வார கால கலை இரவு நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.
காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் உலக நுகர்வோர் தின விழா காரைக்கால் அம்மையார் கலையரங்கில் திங்கள்கிழமை காலை நடைபெறுகிறது. முன்னதாக, பேருந்து நிலைய வளாகத்திலிருந்து நுகர்வோர் விழிப்புணர்வு மாணவர்கள் பங்கேற்கும் பேரணி தொடங்கவுள்ளது.
நுகர்வோர் விழிப்புணர்வு விழாவில் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு பேசவுள்ளனர். இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநர் பா. கீதா ஞாயிற்றுக்கிழமை கூறியது:
நுகர்வோர் தின விழாவைத் தொடர்ந்து, நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தெருமுனை நுகர்வோர் கலை இரவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சியின் முதல் நாளான திங்கள்கிழமை திருநள்ளாறு, நெடுங்காடு பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது. 28-ஆம் தேதி நிரவி பகுதிக்குள்பட்ட விழுதியூர் பேருந்து நிறுத்தம். 29-ஆம் தேதி திருமலைராயன்பட்டினம் பகுதி போலகம் கடைத்தெரு. 30-ஆம் தேதி திருநள்ளாறு பகுதிக்குள்பட்ட சேத்தூர் பேருந்து நிறுத்தம், அம்பகரத்தூர் மாரியம்மன் கோயில் திடல். 31-ஆம் தேதி காரைக்கால் நேருநகர் நுழைவு வாயில் பகுதி மற்றும் கோட்டுச்சேரி பேருந்து நிறுத்தம். ஏப். 1-ஆம் தேதி காரைக்கால் கடற்கரை சாலை மற்றும் கோயில்பத்து பழைய ரயிலடி பகுதி ஆகியவற்றில் மாலை 6 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
கலை நிகழ்ச்சிகள் மூலம் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களிடையே விநாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படவுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com