12,357 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

காரைக்காலில் 2-ஆம் கட்டமாக 12,357 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை புகட்டப்பட்டது.

காரைக்காலில் 2-ஆம் கட்டமாக 12,357 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை புகட்டப்பட்டது.
நிகழாண்டில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் ஏப்.2 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 2-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதையடுத்து 2-ஆவது கட்டமாக ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. காரைக்காலில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நலவழித்துறை துணை இயக்குனர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவ நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசுப்பள்ளிகள், பேருந்து நிலையம், திருநள்ளாறு கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 12,357 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து
புகட்டப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் இப்பணிக்காக 300 பயிற்சி பெற்ற நலவழித்துறை ஊழியர்கள், அங்கன்வாடி மைய ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நகர்ப்புறத்தில் 25 மையங்களிலும், கிராமப்புறத்தில் 45 மையங்களிலும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெற்றது. வெளிமாநிலங்களில் இருந்து தொழில் முறையில் காரைக்காலில் வசிப்போருக்கும் சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com