அரசுப் பேருந்து மோதி சாலையோரம் நின்றவர் சாவு
By DIN | Published on : 19th May 2017 08:41 AM | அ+அ அ- |
காரைக்காலில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர் உயிரிழந்தார்.
காரைக்கால் பகுதி கல்லறைப்பேட் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவர் காரைக்கால் நகரப் பகுதி புறவழிச்சாலை, புளியங்கொட்டை சாலை சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் இருந்துகொண்டு புதன்கிழமை இரவு பேசிக்கொண்டிருந்தார். அப்போது காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் சென்ற தமிழக அரசுப் பேருந்து, இவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு செல்வம் காயமடைந்தார். உடனே காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் திருவாரூரை சேர்ந்த நடராஜ் (56) என்பவரை கைது செய்தனர்.