என்.ஐ.டி.யில் மின்னணுவியல் துறை தொழில் பட்டறை தொடக்கம்

காரைக்கால் என்.ஐ.டி. வளாகத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்துவந்துள்ள ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கும் 3 நாள் மின் மற்றும் மின்னணுவியல் துறை தொழில் பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் என்.ஐ.டி. வளாகத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்துவந்துள்ள ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கும் 3 நாள் மின் மற்றும் மின்னணுவியல் துறை தொழில் பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது.
இதில் காரைக்கால், புதுச்சேரி, தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 50 ஆராய்ச்சி  மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
காரைக்கால் என்.ஐ.டி. இயக்குநர் யோகராஜ் சூட் தொழில் பட்டறையை தொடங்கிவைத்துப் பேசினார். என்.ஐ.டி. மின் மற்றும் மின்னணு துறை தலைவர் கே.சந்திரசேகரன், மின் துறையின் வளர்ச்சிக்கும், எதிர்கால பயன்பாட்டுக்கும் எவ்வாறு இந்த பட்டறையின் மூலம் பயன் சேர்க்கலாம் என்பது குறித்து விரிவாக பேசினார்.
உதவிப் பேராசிரியர் டி.வினோபிரபா, கட்டுப்பாட்டு பொறியியலின் பயன்பாடு குறித்தும், உதவிப் பேராசிரியர் ஜி.கோப்பெருந்தேவி, ஆராச்சியில் சக்தி மின்னணுவியலின் பயன்பாடு குறித்தும், ஏ.வெங்கடேசன் செயற்கை நுண்ணறிவியலின் பயன்பாடு குறித்தும் விளக்கவுரையாற்றினர்.
 மூன்றாம் நாளான சனிக்கிழமை திருவனந்தபுரத்தை சேர்ந்த சிடிஏசி நிறுவன சக்தி மின்னணுவியல் குழுவின் இணை இயக்குநராக பணியாற்றும் வி.சந்திரசேகரன்  தற்போதைய காலகட்டத்தில் தொழிற்சாலைகளிலும், கல்வியிலும் மின் மற்றும் மின்னணு துறையின் முக்கியத்துவம் குறித்து பேசவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com