காரைக்கால் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு சிமென்ட் ஏற்றுமதி

காரைக்கால் துறைமுகத்திலிருந்து கோட்டியா வகை படகில் இலங்கைக்கு சிமென்ட் ஏற்றுமதி நடைபெறுவதாக  துறைமுக நிர்வாகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

காரைக்கால் துறைமுகத்திலிருந்து கோட்டியா வகை படகில் இலங்கைக்கு சிமென்ட் ஏற்றுமதி நடைபெறுவதாக  துறைமுக நிர்வாகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகம் இயங்கி வருகிறது.
அண்மைக் காலமாக இங்கிருந்து சிமென்ட் ஏற்றுமதி படகில் செய்யப்படுகிறது. இதுகுறித்து மார்க் துறைமுக பொதுமேலாளர் ராஜேஷ்வர்ரெட்டி வியாழக்கிழமை கூறியது:
இலங்கைக்கு இந்த துறைமுகத்திலிருந்து தேவைக்கேற்ப சிமென்ட் அனுப்பிவைக்கப்படுகிறது. இது விசைப்படகு தோற்றம் கொண்ட கோட்டியா படகில் அனுப்பப்படுகிறது. இந்த படகில் சுமார் 200 டன் வரை ஏற்றலாம்  என்றார்.
திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிமென்ட் காரைக்கால் துறைமுகத்துக்கு லாரி, ரயில்களில் கொண்டுவரப்படுகிறது. பெரும்பான்மையாக கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டாலும், இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு கோட்டியா படகு மூலம் அனுப்பிவைக்கப்படுவது இப்போதுதான் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com