காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம்

காரைக்காலில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மேலிட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

காரைக்காலில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மேலிட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
 புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடந்துவருகின்றன.  இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவர் அ.பாஸ்கரன் தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கே.டி.பென்னி (கேரளம்) இக்கூட்டத்தில் கலந்து
கொண்டார். புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பேசும்போது, காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் சேர்ப்பில் அனைவரும் ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் கட்சியின் உறுப்பினர் அதிகமிருக்கச் செய்யவேண்டும். உறுதியாக அவர்கள் கட்சியில் இருந்து செயலாற்றக்கூடியவராக இருக்கவேண்டும். சரியான முறையில் பரிசீலனை செய்து உறுப்பினரை சேர்க்கவேண்டும். அடிப்படை உறுப்பினர் சேர்ப்புதான் கட்சிக்கு பலம். இதன் மூலமே அகில இந்திய அளவில் கட்சி மேலும் வலுப்பெறும், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கரம் வலுப்படும்.  இதை உணர்ந்து கட்சி நிர்வாகிகள், உறுப்பினர் சேர்ப்புப் பணியை ஏற்றுக்கொண்டவர்கள் செயல்படவேண்டும் என்றார்.
உறுப்பினர் சேர்க்கை வழிகாட்டு முறைகளை விளக்கி மேலிட பொறுப்பாளர்கள் கட்சியினரிடையே பேசினர். கட்சியினர் எழுப்பிய சந்தேகங்களுக்கு அவர்கள் விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏ.வி.சுப்ரமணியன், அ.மாரிமுத்து, கட்சி மாநில நிர்வாகி எம்.ஓ.எச்.பஷீர் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com