காரைக்கால் நகரப் பகுதி 3 வார்டுகளில் தனிநபர் கழிப்பறை கட்டுமானம் நிறைவு

காரைக்கால் நகர பகுதியில் 3 வார்டுகளில் தனிநபர் கழிப்பறை கட்டுமானம் நிறைவுபெற்றதாகவும், மேலும் 3 வார்டுகள் தொடர்பான ஆட்சேபணைகள் இருந்தால் தெரிவிக்குமாறு நகராட்சி நிர்வாகம் கோரியுள்ளது

காரைக்கால் நகர பகுதியில் 3 வார்டுகளில் தனிநபர் கழிப்பறை கட்டுமானம் நிறைவுபெற்றதாகவும், மேலும் 3 வார்டுகள் தொடர்பான ஆட்சேபணைகள் இருந்தால் தெரிவிக்குமாறு நகராட்சி நிர்வாகம் கோரியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையர் கே.ரேவதி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட வார்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூலம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இந்த திட்டத்தின்படி காரைக்கால் நகராட்சியில் முதல்கட்டமாக அம்மையார் கோயில், அந்தோனியார் கோயில், மாதா கோயில் ஆகிய 3 வார்டுகளில், பொதுமக்களிடம் இருந்து எந்த ஆட்சேபணையும் இல்லாததால் மேற்கண்ட வார்டுகளில் தனிநபர் கழிப்பறை திட்டம் தன்னிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் 2-ஆம் கட்டமாக காதர் சுல்தான், கோத்துக்குளம், கிராம்புத்தோட்டம் ஆகிய 3 வார்டுகளில் இந்த திட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்படவுள்ளது. இந்த வார்டுகளை சேர்ந்த மக்களுக்கு ஏதேனும் ஆட்சேபணைகள் இருந்தால், நகராட்சி ஆணையரிடம் 15 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com