திருநள்ளாறு கோயிலில் இன்று பிரம்மோத்ஸவ கொடியேற்றம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மோத்ஸவ கொடியேற்றம் நடைபெறுகிறது.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மோத்ஸவ கொடியேற்றம் நடை
பெறுகிறது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவம் பூர்வாங்க பூஜையாக ஸ்ரீ மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் கடந்த 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
திருவிழா முறைப்படி தொடங்கும் வகையில் கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.15-க்கு மேல் 9.15 மணிக்குள் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து தலா 3 நாள்கள் ஸ்ரீ விநாயகர், சுப்ரமணியர் உத்ஸவம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு, ஜூன் 4-ஆம் தேதி தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படவுள்ளது. பக்தர்களுக்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே.பன்னீர்செல்வம் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com